வேகமாக பரவும் கொரோனா வைரஸ்.. எப்போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்? - Seithipunal
Seithipunal


சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பின், அதற்கு கொரோனா வைரஸ் நோய் 2019 (COVID-19) என்று பெயரிடப்பட்டது. இதில் உள்ள CO என்பது கொரோனா என்பதையும், VI என்பது வைரஸையும், D என்பது Disease என்பதையும் குறிக்கும். இதன் புதிய திரிபு வடிவத்தை தான் நாவல் கொரோனா என்று சொல்லப்படுகிறது. இது சார்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும்.

கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பும், வந்த பின்பும் என்னென்ன தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கொரோனா வைரஸ் பரவுவது எப்படி?

எப்பொழுதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் உணவை கையால் பரிமாறவோ அல்லது பகிரவோ வேண்டாம்.

கொரோனா வைரஸ் நீர்த்திவலைகளிலிருந்து தப்பிக்க கை குட்டைகளை பயன்படுத்தலாம்.

இருமல் மற்றும் தும்மல் உள்ளவர்களிடமிருந்து இடைவெளியில் இருப்பது நலம்.

நாள் ஒன்றுக்கு ஒரு முககவசம் அணியலாம்.

முககவசத்தை கழட்டியப்பின் சரியான முறையில் அதற்கு உண்டான கூடையில் களையவும்.

சுமார் 20 நொடிகள் கையின் பின்புறம், நகத்தின் அடிப்பாகம் விரலுக்கு இடையில் என கைகளை நன்கு கழுவுங்கள்.

பொதுவாக கூட்டமான, நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம்.

உங்களின் முகத்தை கைகளால் தொடும் முன்பு நன்றாக சோப்பு போட்டு முழங்கை வரை கழுவ வேண்டும்.

நோயாளியின் உமிழ்நீர், இருமல், தும்மலில் வெளிவரும் நீர்த்திவலைகள் கைகள், கைப்பிடி, பேனா, மவுஸ், தேக்கரண்டி, மொபைல் போன், லேப்டாப், கைக்குட்டை என இந்த இடங்களில் எல்லாம் படிந்து அதில் வைரஸ் கிருமியும் இருக்கும். இந்த பொருட்களையெல்லாம் தொட்டுவிட்டு, உங்களின் அன்பானவர்களை தொடுவதன் மூலம் அவர்களுக்கும் நோய் தொற்றும்.

மேசை மற்றும் இதர பொருட்களின் மேற்பரப்பில் இந்த வைரஸ் 24 மணி நேரம் உயிருடன் இருக்கும். அதனால் பொருட்களின் மேற்பரப்பை தண்ணீரும், சோப்பும் கொண்டோ அல்லது கிருமிநாசினியை கொண்டு துடைப்பது நல்லது.

எப்போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்?

தும்மல், இருமலுக்குப் பிறகு

உணவு தயாரிப்பதற்கு முன்பும், பிறகும்

சாப்பிடப் போகும் முன்

கைகளில் கறை படிந்திருக்கும்போது

கழிவறை உபயோகத்துக்குப் பிறகு

பிராணிகளுடன் நேரம் செலவழித்த பிறகும்

பிராணிகளை பராமரித்த பிறகும்

நோயுற்று இருப்பவர்களை கவனித்துக் கொண்ட பிறகும்

கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க :

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமைக்காத இறைச்சிகள், சமைக்காத முட்டைகள், சமைக்காத காய்கறிகளை சாப்பிட வேண்டாம்.

வைட்டமின் சி வகை உணவுகளும் நம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நெல்லிக்காய், சிவப்பு மிளகாய், மஞ்சள் மிளகாய், ஆரஞ்சு, கொய்யாப்பழம், பப்பாளி போன்ற வைட்டமின் சி உணவுகளை அதிகளவில் எடுத்து வாருங்கள். இதன் ஆன்டி ஆக்ஸிடன் தன்மை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி நோய்களை விரட்டுகிறது.

காய்ச்சிய நீரை வடிகட்டி அருந்த வேண்டும்.

காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதில் புரதச்சத்து நிறைந்து உள்ளது.

தெருவோர கடைகளில் உண்பதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

வெளியில் செல்வதை தவிருங்கள்.

கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்வதை முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது.

குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள், சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வருவோர், முதியவர்கள் போன்றோர் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona awareness 8


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal