நீரிழிவு நோயாளிகள் பழைய சோறு சாப்பிடலாமா? கூடாதா?
Can diabetics eat fermented rice
வீட்டில் மீந்த பழைய சோறு நம் உடலுக்கு மிக மிக நல்லது தான். ஆனால்,ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து முற்றிலும் நீரிழிவை கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் முடியும் என்று சமூக வலைதளங்களில் நிறைய செய்திகள் பரப்பப்படுகின்றன.

அதை மக்களும் நம்பி பின்பற்றுகிறார்கள். நிஜமாகவே இது உண்மையா இல்லையா, சர்க்கரை நோயாளிகள் பழைய சோறு சாப்பிடலாமா, கூடாதா, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பழைய சோறு சாப்பிட்டா சர்க்கரை குறையும்னு யாராவது சொன்னா நம்பலாமா? கூடாதா?
மேலை நாடுகளிலிருந்து வெளிவந்த பல ஆய்வுகளின் முடிவால் மேற்கத்திய நாடுகளில் fermented rice என்கிற பெயரில் நம் ஊர் பழைய சோறு விற்கப்படுகிறது.
அதற்குபிறகே நம் ஊரிலும் அதன் அருமை தெரிந்து ஹோட்டல்களில் கூட பழைய சோறு, பழங்கஞ்சி என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் நீரிழிவு நோயாளிகள் எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் நாம் தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
கட்டாயமாக அதிகரிக்கும். பழைய சோறு உடலுக்கு நல்லதாகவே இருந்தாலும் அதை நொறுங்கக் கரைத்து கூழாகவோ கஞ்சி போலவும் சாப்பிடவே கூடாது.பழைய சாதம் மட்டுமல்ல, எந்த உணவாக இருந்தாலும் கூழாகவும் கஞ்சியாகவும் எடுக்கவே கூடாது.
குறிப்பாக உங்கள் HbA1C அளவு கண்ட்ரோல் இல்லாமல் 10க்கு மேல் இருக்கிறது என்றால் அவர்கள் பழைய சாதத்தை கஞ்சியாக சாப்பிடாதீங்க. வேண்டுமானால் தண்ணீர் ஊற்றாமலே அடுத்த நாள் மீண்டும் சூடு செய்து குறைவாக எடுக்கலாம்.
English Summary
Can diabetics eat fermented rice