உடல் துர்நாற்றமா உஷார்.. இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் உடலுக்கும் ஒரு வாசனை இருப்பது வழக்கம். உங்கள் தோலில் இருக்கும் பாக்டீரியா மற்றும் வியர்வை கலப்பதால் இந்த வாசனை ஏற்படும். 

உணவு பழக்கங்கள், ஹார்மோன்கள், நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் அல்லது நீரிழிவு போன்ற வற்றின் காரணமாக நமது உடலில் துர்நாற்றம் ஏற்படக்கூடும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் கெட்டோஅசிடோஸின் ஏற்பட்டு இருந்தால் உடலில் துர்நாற்றம் ஏற்படக்கூடும். உடலில் அதிகப்படியான கீட்டோன் அளவு ரத்தத்தில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.

இது ஒரு விதமான பழ வாசனை போல இருக்கும். உங்கள் ரத்தத்தில் கீட்டோன்கள் எந்த அளவில் இருக்கிறது என்பதை சிறுநீர் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும். 

நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு போதுமான அளவு இன்சுலின் இருக்காது. அதிகப்படியான கீட்டோன்கள் உருவாக்கப்படும். எனவே இது சிறுநீர் மற்றும் ரத்தத்தில் ஆபத்தான அளவுகளை ஏற்படுத்தக்கூடும். 

ரத்தம் அமிலமாக மாறும். எனவே, நம் சுவாசம் மற்றும் வியர்வை மூலமாக குட்டோன்கள் உடலை விட்டு வெளியேறுகின்றன. இதன் காரணமாக தான் உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. 

எனவே, உடலில் அசாதாரணமான துர்நாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை செய்து ஆலோசனை செய்வது அவசியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Body Bad smell May Diabetics


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->