வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


நமது உடலுக்கு நன்மையை சேர்க்கும் வெண்டைக்காயை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இன்று காண்போம். வெண்டைக்காயை சாப்பிட்டால் இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்று புண், பார்வை குறைபாடு போன்ற நோய்கள் சரியாகும்.

வெண்டைக்காயில் உள்ள நீர்சத்து திரவ இழப்பை தடுத்து, உடலினை குளிர்ச்சியாக்குகிறது. இதில் இருக்கும் கரையக்கூடிய நார்சத்து கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைத்து, இதய நோய்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.

வெண்டைக்காயில் உள்ள வழவழப்பு தன்மை காரணமாக மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் சரியாகிறது. பிஞ்சு  வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு தேவைப்படும் போலிக் அமிலத்தை வெண்டைக்காய் அதிகளவு சுரக்க வைக்கிறது. வெண்டைக்காயை ஊறவைத்து, அந்த நீரை குடித்தால் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் சரியாகும். 

சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் வெண்டைக்காயை ஊறவைத்த நீர் நல்ல உதவி சேகரித்து. வெண்டைக்காயை சாப்பிடுவதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமல் பிரச்சனை தவிர்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Vendaikai or Ladies Finger Health Tips


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->