ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கின் அற்புத நன்மைகள்.!
Benefits of sweet potato
கிராம பகுதிகளில் எளிதாக கிடைக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதன்படி சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள வைட்டமின் பி6 இதயநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இதில், அதிக அளவில் நார் சத்து இருப்பதால் தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் டி தைராய்டு சுரப்பிகள், பல், எலும்பு, நரம்புகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் வாயு தொல்லை தொந்தரவை சரி செய்வதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பெண்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் இதனை கட்டாயம் சாப்பிட வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு இயற்கையாகவே இனிப்பு சுவை நிறைந்துள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடலாம். மேலும் இந்த கிழங்கை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.
சர்க்கரை வள்ளி கிழங்கில் மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனிசு போன்ற மினரல் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களாகும். மேலும் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்க உதவுகிறது.