வைட்டமின் கே நிறைந்த சிவப்பு முட்டைக்கோஸ் புற்று நோயைத் தடுக்குமா?
Benefits of Red cabbage
சிகப்பு முட்டைக்கோஸில், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் டி அதிகமாக நிறைந்துள்ள ஒரு முக்கியமான காயாகும். மேலும் இதில் கால்சியம் துத்தநாகம் மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளன.
நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ள இந்த காய்கறியானது, நமது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் நார்ச்சத்துக்கள், உணவு எளிதாக செரிமானமாகி நமது செரிமான மண்டலம் நன்றாக வேலை செய்ய உதவி செய்கிறது.
சிகப்பு முட்டை கோஸில் உள்ள
அந்தோசயனின்கள் நம் இதயத்திற்கு நன்மை பயக்கும். இந்த அந்தோசயினின்கள் அதிகமாக உள்ள உணவுகள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைப்பதினால், இதய நோய் ஏற்படுவதற்கான கூறுகள் குறைவாக இருக்கின்றன.
சிகப்பு முட்டைக்கோஸ் ஆனது உடலில் வீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் அதனுடன் சேர்ந்த வலி, போன்ற அசௌகரியங்கள் குறையவும் இது உதவுகிறது.

இந்த முட்டைகோஸில் உள்ள சல்போராபேன் மற்றும் அந்தோசயனின்கள் சில வகையான புற்று நோய்களுக்கு எதிராக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்கிறது.
இந்த சிவப்பு முட்டைக்கோஸ், நமது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான நன்மையை தருகிறது. இதில் இருக்கக்கூடிய நார் சத்துக்கள், ப்ரீ பயோட்டிக் வகையைச் சார்ந்தது. உடலில் இருக்கக்கூடிய நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவை அளித்து நமது குடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றன.