பெருங்காயத்தில் வெந்நீரை கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?!
benefits of perungayam
பெருங்காயம் ஒரு பிசின். இந்தியாவில் மட்டும் இன்றி, பல்வேறு நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக மருத்துவப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றில் ஏற்படும் உப்புசம், கெட்ட காற்று, செரிமானக் கோளாறுகள் போன்றவற்றைச் சரிசெய்யும். எனவேதான் நம் முன்னோர்கள், சமையலில் பெருங்காயம் சேர்த்துவந்தனர்.

வயிற்று வலி, மார்பு வலி போன்றவை ஏற்படும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரில், கால் தேக்கரண்டி பெருங்காயத்தைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிக் குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மாதவிடாய் வலிக்கு, பெருங்காயத் தூள் மற்றும் பனை வெல்லம் சேர்த்துத் தயாரித்த சிறு உருண்டைகளைச் சாப்பிட்டுவர, வலி குறையும்.
மோரில் எப்போதுமே சிறிது பெருங்காயத் தூள் கலந்து சாப்பிடுவது நல்லது.
பருப்பு வகைகளைச் சமைக்கும்போது, பெருங்காயம் சேர்த்துச் சமைத்தால், வாதப் பிரச்னைகள் குணமாகும்.