கர்ப்பிணி பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்.!
Benefits of naval pazham
கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் தவத்துடன் இருப்பது அவசியம். அதிலும் குறிப்பாக அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் குழந்தையின் வளர்ச்சி நாம் உண்ணும் உணவுகள் தான் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் நாவல் பழம் சாப்பிடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
நாவல் பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் கள் மற்றும் பாலிபினால்கள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. மேலும் நாள்பட்ட நோய்களுக்கு எதிராக போராடவும் பயன்படுகிறது.
கர்ப்ப கால நீரழிவு நோயை தடுக்க நாவல் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாவல் பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இது கர்ப்பகால நீரழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

அதேபோல் நாவல் பழம் சாப்பிடுவதால் கர்ப்பகால ஹார்மோன்களால் பெண்கள் மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. நாவல் பழத்தில் அதிக அளவில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கங்களை சீராக்கிறது. அதேபோல் இரைப்பை குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
நாவல் பழம் சாப்பிடுவதால் தாய் மற்றும் வளரும் கரு இரண்டையும் பாதுகாக்க வலுவன நோய் எதிர்ப்பு அமைப்பை உருவாக்குகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
நாவல் பழம் சாப்பிடுவதால் கர்ப்ப காலத்தில் வளரும் குழந்தையின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நாவல் பழத்தில் அதிக அளவில் இரும்பு சத்து நிறைந்துள்ளது இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.
நாவல் பழத்தில் அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்ப காலத்தில் தாயின் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் கால்சியம் மிக முக்கிய பங்கு வைக்கிறது. எனவே நாவல் பழம் சாப்பிடுவதால் கால்சியம் குறைபாட்டை போக்குகிறது.