அனைத்து விதமான காய்ச்சலையும் விரட்டியடிக்கும் ஒற்றை மூலிகை.. என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் சிறிய உடல்நல பாதிப்பு என்றால் கூட மருத்துவர்களிடம் சென்று ஊசி போடுவதும், மாத்திரை வாங்கும் பழக்கம் உள்ளது. ஆனால் மிகப்பெரிய நோய்களைக் கூட வீட்டிலிருந்த படியே எளிதாக சரி செய்யக்கூடிய பல மூலிகைகள் உண்டு.

அதன்படி அற்புதமான மூலிகை தான் கீழாநெல்லி கீரை. இதனை கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி எனவும் அழைக்கப்படுகிறது. கீழாநெல்லியின் மருத்துவ நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாக கீழாநெல்லி செடி இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து 100 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக காய்ச்சி 50 மில்லி நீராக்கி காலை, மாலை என தினமும் இரண்டு வேலைகள் இளம் சூட்டில் குடித்து வர டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து காய்ச்சல்களும் குணமாகும்.

வெட்டு காயங்கள் ஆற கீழாநெல்லி அரைத்து காயங்களில் வைத்து கட்டினால் வெட்டு காயங்கள் குணமாகும்.

கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து சாறு எடுத்து கல் உப்பு சேர்த்து கலந்து உடலில் தேய்த்து வந்தால் தோல் வியாதிகள், மற்றும் அரிப்பு குணமாகும்.

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சை பழ சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் இது கல்லீரல் பாதிப்புகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

உலர்ந்த கீழாநெல்லி பொடியை உணவுக்கு முன்பாக மூன்று வேலையும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகளை தடுத்து டயாலிசிஸ் செய்வதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்த சாற்றை குடித்தால் தலைவலி குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of keezhanelli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->