கேரட்டை தினமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா.?
Benefits of eat carrots
மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்று கேரட். குறைவான சர்க்கரை அளவுடன் அதிக அளவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் தான் மருத்துவர்கள் கேரட் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்துகின்றனர்.
அதன்படி கேரட்டில் வைட்டமின், பைபர், கார்போஹைட்ரேட், பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்துக்களும் அடங்கியுள்ளது. மேலும் உடலில் உள்ள இரும்பு சத்துக்களை அதிகரிக்கவும் கேரட் உதவுகிறது.
கேரட்டை கழுவி விட்டு தோல் நீக்கி அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். அல்லது பொறியியில்லாத சமைத்தோ, சாம்பாரில் கட் செய்து போட்டு சாப்பிடலாம். அதன்படி கேரட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
கேரட்டில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் இதில் அதிக அளவு நார் சத்து நிறைந்துள்ளது. மேலும் கேரட் சாப்பிடுவதால் பசி தன்மையை கட்டுப்படுத்த முடியும். மற்ற குறைந்த நார் சத்துள்ள உணவுகளின் ஒப்பிடும் போது கேரட்டை சாப்பிடும் போது வேகமாக பசியிலிருந்து விடுபடலாம்.

கேரட்டை சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்கும். மேலும் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. இது நமது உடலில் இரும்பு சத்தை அதிகரிக்க உதவுவதாகவும் இதனை பனிக்காலத்தில் டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் தரும் என கூறப்படுகிறது.
கேரட்டில் அதிக அளவு வைட்டமின் ஏ ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை நமது உடலில் உறுதி செய்கிறது. அதேபோல் கேரட்டில் வைட்டமின் சி உள்ளது இது நோய் தடுப்பு பண்புகளுக்கு உதவுகிறது. இதனால் கேரட் சாப்பிடுவதால் உடலில் எந்தவித நோய்களும் அவ்வளவு எளிதாக தாக்காது.
கேரட்டை சாப்பிடுவதால் முகம் அழகாக இருக்கும். இதில் உள்ள வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்து இருப்பதால் சருமம் இளமையுடன் இருக்க உதவுகிறது. மேலும் கேரட் சாப்பிடுவதால் சர்க்கரை அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே மருத்துவர்கள் கேரட்டை சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.