காலையில் சோம்பு தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


சோம்பு நம் உணவில் சுவை மற்றும் பலத்தைக் கூட்டுவதோடு பல்வேறு வகையான மருத்துவ குணங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. இதனை தொடர்ச்சியாக உணவில் சேர்த்து வரும்போது நமது உடலுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கின்றன. சோம்பு கலந்த தண்ணீரை தினமும் குடித்து வருவதால் நம் உடல் பல்வேறு விதமான நன்மைகளை அடைகிறது.  அவை என்ன என்று பார்ப்போம்.

சோம்பு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் வளர்ச்சியை மாற்றம் சீர் செய்யப்படுகிறது. இதன் காரணமாக உடலின் கலோரிகள் மற்றும் கொழுப்புகளை கரைத்து நம் உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

சோம்பு தண்ணீரின் மற்றொரு முக்கியமான பயன் ரத்தத்தை சுத்திகரிப்பதாகும். சோம்பு கலந்த தண்ணீரை குடித்து வருவதால் இது ரத்தத்தில் இருக்கும் யூரிக் ஆசிட்  வெளியேற்றுகிறது. இதன் காரணமாக நமது ரத்தமானது சுத்திகரிக்கப்படுகிறது மேலும் நம் இடுப்பு பகுதியை சுற்றியுள்ள சதைகள்  கரைவதற்கும் உதவுகின்றன.

அஜீரணக் கோளாறு மற்றும் செரிமான பிரச்சினைகளால் ஏற்படும் வயிற்று வலிகளை போக்க சோம்பு தண்ணீர் பயன்படுகிறது. தினமும் காலையில் டீ அல்லது காபிக்கு பதில் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் நமது மூளை மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படும்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலியை போக்க  சோம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர  அடி வயிற்று வலி நீங்குவதோடு  புத்துணர்ச்சியும் ஏற்படும்.

சோம்பு தண்ணீரானது மூளையில் இருக்கும் சுரக்கப்படும் பிட்யூட்ரி சுரப்பி இந்த சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோன் நம் நல்ல உறக்கத்தை பெறுவதற்கு உதவுகிறது. சோம்பு தண்ணீரை குடித்து வருவதன் மூலம் நமக்கு நல்ல உறக்கமும் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of drinking fennel seed water


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->