சிறுநீரகத்தை பாதுகாக்கும் கொத்தமல்லி ஜூஸின் அற்புத நன்மைகள்.!
Benefits of coriander juice
கொத்தமல்லி ஜூஸ் தினமும் குடிப்பதால் நம்முடைய உடலில் உள்ள நோய்கள் அனைத்தையும் போக்குவதோடு, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளை போக்குகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் ரத்த சோகையை விரட்டியடித்து, ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.
அதுமட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளை போக்குகிறது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பார்வை திறன் குறைபாடுகளை நீக்குகிறது.
கொத்தமல்லியில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் நோய் தாக்குவதை குறைக்கிறது. அஜீரண பிரச்சனைகள் இருப்பவர்கள் கொத்தமல்லி ஜூஸ் குடிப்பதால் நொதிகளின் உற்பத்தி அதிகரித்து செரிமானத்தை சீராக்குகிறது.

கொத்தமல்லி ஜூஸில் நிறைந்துள்ள கால்சியம் எலும்புகளை வலிமையாக வைக்க உதவுகிறது. மேலும் கொத்தமல்லி ஜூஸ் தினமும் குடிப்பதால் வாய்ப்புண்கள் குணமாகி, வாயை சுத்தமாக வைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் கொத்தமல்லி ஜூஸ் குடிப்பதால், பசி உணர்வை குறைத்து மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
குறிப்பாக நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வருகிறது. அந்த சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்கள் கொத்தமல்லி ஜூஸ் அடிக்கடி குடிப்பது நல்லது. மேலும் சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக பச்சை கொத்தமல்லி சாப்பிடுவது நல்லது.
English Summary
Benefits of coriander juice