புதிதாக திருமணம் செய்தவர்கள் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்.!  - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்பெண்கள் கட்டாயம் முட்டைகோஸை தங்களது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது நார்சத்து அதிகம் உள்ள உணவாகும். எனவே, இதனை அவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும். மேலும், தாம்பத்தியத்தில் ஈடுபடும் பெண்களும் இதனை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். 

முட்டைகோஸின் மருத்துவ குணங்கள்

முட்டைக்கோசில்,  தொற்று நோயை எதிர்த்துப் போராடும் சல்ஃபர் அதிக அளவில் இருப்பதால், தினமும் சிறிதளவு முட்டைக்கோசை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த வியாதியும் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ளும். 

இதில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்து, அதனால் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலின் உட்பாகத்தில் சிறு கட்டிகள் தோன்றி, அதை நாம் கவனிக்காமல் போனால் அதுவே புற்று நோயாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது. முட்டைக்கோசை சாப்பிட்டால் அம் மாதிரியான கட்டிகள் கூடக் கரைத்து விடக்கூடும்.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, தாதுகள், வைட்டமின்கள் போன்ற எல்லாமே இதில் அடங்கியிருக்கிறதாம். ஒரு கப் சமைக்கப்பட்ட முட்டைக்கோசில், முப்பத்து மூன்று கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையும் கூடாது. இந்தக் காயில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கக் கூடியது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. அதனால் ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.

கண் பார்வையை கூர்மையாக இருக்க வைப்பதோடு, காட்டராக்ட் எனப்படும் கண்புரை வருவதையும் தவிர்க்கிறது. சிலருக்கு இளம் வயதிலேயே முதுமையின் சாயல் தெரியத் தொடங்கும். தோலில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள், தோலின் நிற மாற்றம் ஆகியவைத் தோன்றத் தொடங்கும். அவை உண்டாகாமல் இருக்க முட்டைக்கோஸ் நல்ல ஒரு மருந்தாகும்.

மிக மிக முக்கியமாக அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் முட்டைக்கோசை தினமும் உணவில் சேர்த்துவந்தால், மறதி நோயிலிருந்து முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு நிவாரணம் பெறலாம் இதை மருத்துவர்களே கூறுகிறார்கள்.

MUTTAIKOS, SEITHIPUNAL

சல்ஃபர், வைட்டமின் சி இரண்டுமே முட்டைக்கோசில் நிறைந் திருப்பதால், இதை உண்பதன் மூலம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், முடக்கு வாதம் இவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல,  பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் சத்துக் களை, இந்தக் காய் உள்ளடக்கி இருப்பதால், எலும்புகள் வலு வூட்டப்படுகின்றன.

ஒரு சாதாரண கோசில், இவ்வளவு மருத்துவத் தன்மைகள் இருக்கின்றன. அதனால் அதை பொரியலாகவோ, கூட்டாகவோ, சாலட் ஆகவோ தினசரி உணவில் எந்த வகையிலாவது சேர்த்துக் கொள்வது நல்லது.
முக்கியமாகச் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு முட்டை கோசை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துவது எதிர்காலத்தில் மிகுந்த நன்மையைத் தரும்

முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது குடலில் உள்ள நொய்த்தொற்று கிருமிகளை அழித்து, அதனை பாதுகாக்க உதவுகிறது. 

முட்டைக்கோஸ் சுவாசப் பாதையில் உள்ள இடையூறுகளை சீர்செய்யும். இதனால், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.

செரிமானப் பிரச்னையை சீர்செய்து, ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. சல்ஃபோபோரான் உள்ளது. புற்றுநோய் பாதிப்பை குறைக்கும். 

மூட்டு வலி பிரச்னைகள், அல்சர், உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மிகவும் பலன் அளிக்கும். முட்டைக்கோஸ் ஜூஸ், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BENEFITS OF CABBAGE


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->