வாழைப்பழத்தின் வகைகளும், அதன் பயன்களும்.!  - Seithipunal
Seithipunal


ரஸ்தாளி:

இந்த வாழைப்பழத்தில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் இது ருசியில் உயர்ந்தது.

மொந்தம் வாழைப்பழம்:

இந்த மொந்தம் வாழைப்பழம் சாப்பிட்டால், அது அதிகப்படியான உடல் வறட்சியைப் போக்குவதுடன், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது.

பச்சை வாழைப்பழம்:

மலை வாழைப்பழம் எனும் பச்சை வாழைப்பழமானது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக் கூடியது. இந்த வாழைப்பழம் ரத்த விருத்தியை சரிசெய்ய உதவுகிறது.

நேந்திர வாழைப்பழம்:

இந்த நேந்திர வாழைப்பழத்தை பச்சையாகவோ, அவித்தோ, சிப்ஸ் வடிவிலோ சாப்பிடக் கூடியது. இது புரதம் அதிகமாக உள்ளது. வயிற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்கும் தன்மைக் கொண்டது.

கற்பூரவள்ளி வாழைப்பழம்:

வாழைப்பழ ரகத்திலேயே மிக இனிப்பானது. ஆனால் இதை நீண்ட நாட்களுக்கு வைத்து உண்பது கடினம். ஏனெனில் இப்பழம் கனிந்து முற்றிவிடும் தன்மைக் கொண்டது.

BANANA, SEITHIPUNAL

செவ்வாழைப்பழம்:

செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலின் பலத்தை மேம்படுத்த உதவுகிறது.

தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்கள் அடிக்கடி  சாப்பிட்டு  வந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு சீராக வரும்.

கதளி மற்றும் எலச்சி:

கதளி வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால், இது செல்களின் செயல்பாட்டை சீர்செய்ய உதவுகிறது. எலைச்சி வாழைப்பழம் சிறியதாக இருந்தாலும் இது மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

பேயன் வாழைப்பழம்:

தினமும் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அது வயிறு மற்றும் குடல் புண்களை உடனே குணமாக்கி, அதிகப்படியான உடல்சூட்டை தணிக்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BENEFIT OF BANANA AND TYPES


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->