பார்லி அரிசியில் இவ்வளவு நன்மைகளா? - இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


அரிசி வகைகளில் ஒன்று பார்லி அரிசி. இந்த அரிசியை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி பயன்படுத்துவது உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது. அப்படி அந்த அரிசி தண்ணீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உடலுக்கு ஏற்படும் என்பது குறித்து இங்குப் பார்ப்போம்.

* பார்லி நீரில் மெக்னீசியம், அமினோ அமிலங்கள், புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், தாமிரம், செலினியம், துத்தநாகம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது.

* உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து இரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இதனால், உடலுக்கு சீராக ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை வேகமாக செயல்பட தூண்டுகிறது. 

* அதிலும் குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி பிரச்சனை மற்றும் மூட்டு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகளை பார்லி தண்ணீர் சரி செய்கிறது. இதில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலம் உடலில் கலந்து எலும்புகளை பலப்படுத்துவதால் உடலில் உள்ள வலியை உடனடியாக குணப்படுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

barly rice water benefit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->