முதுகு வலியா?! இதை செய்தால் மட்டும் போதும்!!
Back pain
செய்முறை :
முதலில் முழங்கால்களை மடக்கி, பாதங்களின் மேல் பிருஷ்டபாகம் நன்கு படும்படி அமர வேண்டும். பின்னர் இரு முழங்கைகளின் உதவியால் முதுகைத் தாங்கி மெதுவாக முதுகை வளைத்து விரிப்பில் படும்படி படுத்துக் கொள்ளவும்.
பின்பு இரண்டு முழங்கால்களையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தலையை மடக்கி தரையில் இருக்கும்படி தலையைப் பின்புறமாக வளைத்து படி அமரவும்.
பின்னர் கைகளைக் கோர்த்து கொண்டு மார்பில் வைக்க வேண்டும். படத்தைப் பார்த்துக் கவனித்துச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முதுகை வளைந்து படுக்க வைக்க வேண்டும்.
அடுத்து ஆசன நிலையில் இருக்கும் போது ஒரே நிலையில் மெதுவாகச் சுவாசம் செய்ய வேண்டும். கடைசியாக சுவாசத்தை மெதுவாக வெளியிட்டவாறு ஆசனத்தைக் கலைக்க வேண்டும்.

பலன்கள் :
- நல்ல இரத்த ஓட்டத்தை ஜனனேந்திரிய பாகங்களுக்கு அளக்கிறது.
- நரம்புக் கோளங்கள், தசை நாளங்கள் ஆகியவற்ற்றை நன்கு இயங்கச் செய்கிறது.
- கர்ப்பாசய உறுப்பு நன்கு அழுத்தப்படுவதால் வலுப்பெறும்.
- கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்த பலனைக் தரும்.
- கருத்தரித்த மாதத்திற்குப் பின்னும், மாதவிடாய் ஆன காலத்திலும் இந்த ஆசனம் செய்தல் கூடாது.
- மச்சாசனம் செய்ய முடியாதவர்கள் இவ்வாசனம் செய்யலாம்.