கருச்சிதைவு ஏற்பட்ட பெண்கள் உணவு விஷயத்தில் என்ன செய்யலாம்?... எதனை சாப்பிடலாம்?.!! - Seithipunal
Seithipunal


தாய்மை என்ற வாழ்வின் முக்கிய கட்டத்தில் கருவை சுமக்கும் பெண்களுக்கு சில சமயத்தில் கருச்சிதைவு நேரலை. இந்தியாவில் வருடத்திற்கு 15.6 மில்லியன் கருச்சிதைவுக்கு நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. தினமும் சராசரியாக 10 பெண்களுக்கு பாதுகாப்பற்ற கருச்சிதைவு காரணமாக மரணம் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள் நோய்களையும் எதிர்கொள்கிறார்கள்.

இதில், கருவை இழந்ததை நினைத்து பெண்கள் மனவேதனைக்கு உள்ளாகும் நிலையில், பழைய நிலைக்கு திரும்ப உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கருசிதைவால் இரத்தப்போக்கு, இரும்புசத்து இழப்பு, வைட்டமின் குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களின் உணவுப்பழக்கவழக்க நடவடிக்கையில் மேற்கொள்ளப்படவேண்டிய விஷயங்கள் குறித்து இனி காணலாம்.

புரதங்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இதனால் இரத்த செல்களின் எண்ணிக்கை அதிகாரிகிறது. அவித்த முட்டை, மீன், பாலாடை, அவகோடா, பட்டாணி, கேரட், ஆரஞ்சு, வாழைப்பழம் மற்றும் பாதம் போன்றவற்றையும் சாப்பிடலாம். 

எளிதில் செரிமானம் ஆகும் வகையில் உள்ள உனவுகளை சாப்பிட வேண்டும். முள்ளங்கி, ஆரஞ்சு மற்றும் முலாம்பழம் போன்றவற்றை சாப்பிட கூடாது. சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை தவிர்க்கலாம். மீன், கோழி மற்றும் ஆடு இறைச்சி, முட்டை, ஈரல், பழங்கள் - காய்கறிகள் போன்றவற்றை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

அசைவ உணவு விரும்பிகள் மீன், கோழி, ஆட்டு இறைச்சி போன்றவற்றை சாப்பிடலாம். இதில், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி உள்ளதால் அவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறைந்தளவு கொழுப்பு கொண்ட பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெறலாம். புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் ஊட்டச்சத்து கிடைக்கும்.

காரமான உணவுகள் மற்றும் இறைச்சி உணவுகளில் காரம் சேர்த்து சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கருச்சிதைவுக்கு பின்னர் பொதுவாக அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் நீரிழப்பு ஏற்படும். இதனை சரி செய்ய தினமும் 8 முதல் 12 குவளை நீர் குடிக்க வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்க உதவி செய்யும். 

உலர்ந்த பழங்கள், இஞ்சி, பூண்டு, எள்ளு, பால் போன்றவற்றை சாப்பிடுவதால் கருச்சிதைவுக்கு பின்னர் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனையை சரி செய்து, உடல் நலத்தை பாதுகாக்கிறது. நொறுக்குத்தீனிகள் மற்றும் துரித உணவுகள், சர்க்கரை கலந்த பானங்கள் போன்றவற்றை குடிக்க வேண்டாம். உருளைக்கிழங்கு மற்றும் சுரைக்காய் போன்றவற்றையும் தவிர்க்கலாம். 

துணி துவைப்பது, தண்ணீர் வாளிகளை தூக்குவது போன்ற எடைதூக்கும் வேலையை செய்ய கூடாது. கருச்சிதைவுக்கு பினர் ஏற்படும் வழியை குறைக்க சூடான கடுகு எண்ணெய் மாற்றம் எள்ளு எண்ணெயை வலியுள்ள பகுதியில் தடவலாம். இதனால் உடலின் வெப்பமும் குறைகிறது. மனஅழுத்தத்தை குறைக்க உங்களுக்கு மன அமைதி கொடுக்கக்கூடிய நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்களிடம் பேசலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி இரும்புசத்து, கால்சியம் போன்றவற்றை வழங்கும் உணவை சேர்க்கலாம். 

மரபணு பிரச்சனை கருச்சிதைவு, கர்ப்பப்பை குறைபாடு, தாய்க்கு ஏற்படும் நோய் பாதிப்பு, அதிக உடல் எடை, நீண்ட நேர பயணம், அடிக்கடி பயணம், அளவுக்கதிமான மன அழுத்தம் போன்ற காரணத்தாலும் கர்ப்பம் தானாகவே கலையும். கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் அடுத்த கர்ப்பத்திற்கு குறைந்தது 6 மாத இடைவெளி தேவை. சந்தேகங்கள் இருந்தால் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று செயல்படலாம். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Abortion Woman Should Note this type of Measure will Improve Health and Wealth


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal