உளறி கொட்டிய ஸ்டாலின், உளறலை மறைக்க தீயாக வேலை செய்த திமுக ஐடிவிங்!  - Seithipunal
Seithipunal


சென்னை மதுரவாயலில் இன்று (பிப்ரவரி 12) நடந்த திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளது ஏமாற்று அறிவிப்பு என்றும், இது யாரை ஏமாற்றுவதற்கு?” என்றும் கேள்வி எழுப்பினார். 

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் எனவும், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாகவும், சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9ஆம் தேதி நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்தனர். இதனை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று இது குறித்து பேசிய ஸ்டாலின், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென திமுக மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. எனினும், அதனை யார் அறிவிக்க வேண்டும் என்கிற சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை என்று குற்றம்சாட்டினார்.  

இந்த பேச்சின் போது, பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக என்பதற்கு பதிலாக சிறப்பு பொருளாதார மண்டலம் என உளறி பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் இன்றைய உளறல் என வைரலாக அதனை பார்த்த திமுக ஐடி விங் பிரிவினர் சிறப்பு பொருளாதார மண்டலம் என பேசியதை எடிட் செய்து விட்டு, வீடியோவை தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பத்திவிட்டுள்ளனர். 

திமுக தலைவர் ஸ்டாலின் மேடைகளில் பேசும்போது சாதாரணமாகவே உளறுவது வழக்கமான ஒன்று தான் என்பதால், நெட்டிசன்கள் தற்போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK stalin speech in marriage function


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->