அவசரமாக தரையிறக்கப்பட்ட சரக்கு விமானம்! நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


துருக்கி, சரக்கு விமானம் ஒன்று முன் தரையிறங்கும் கியர் திடீரென செயலிழந்ததால் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

பெட்எக்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 விமானம் பின் தர இயங்கும் கியரை மட்டுமே பயன்படுத்தி தர இயங்கியதால் விமானத்தின் முன் பகுதி தரையுடன் மோதி தீப்பற்ற தொடங்கியது. 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை எனவும் விமான ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் துருக்கி போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும் விபத்துக்குள்ளான விமானத்தை அகற்றும் பணி முடியும் வரை விமானம் தரையிறங்கிய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Emergency landing cargo plane


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->