''தக் லைஃப்'' திரைபடத்தில் நடிகர் சிம்பு: வைரலாகும் போஸ்டர்.!
Thug Life film Actor Simbu poster
மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''தக் லைஃப்''. இந்த திரைப்படத்தில் சிம்பு, திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, செர்பியாவிலும் நடைபெற்றது. இதற்கிடையே நடிகர் துல்கர் சல்மான் இந்த திரைப்படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சிம்பு இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் டெல்லியில் தொடங்கியுள்ள அடுத்த கட்ட படப்பிடிப்பில் நடிகர் கமலஹாசன், சிம்பு ஆகியோருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ''தக் லைஃப்'' திரைப்படத்தில் சிம்பு இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு கமலுக்கு மகனாக நடிக்கிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Thug Life film Actor Simbu poster