குருபகவானுடைய அருளை பெறும் முறைகள்! - Seithipunal
Seithipunal


நவக்கிரகங்களில் பெருமை பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவன்தான். தனம், புத்திர ஸ்தானங்களின் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தடையின்றி கிடைக்கும். 'குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு விருந்தளிப்பர்.  

குரு நம்முடைய வாழ்க்கையில் மாற்றம் உண்டாக்க வழிமுறைகள்:

தினமும், தலை குளித்து தூய உடைகளை அணிந்து, நல்ல எண்ணங்களோடு இருக்க வேண்டும்.

அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு குரு வணக்கம், குரு காயத்ரி, குரு ஸ்துதி, குரு தியானம், குரு அஷ்டாதச நாமார்ச்சனை (18 நாமங்கள்), குரு அஷ்டோத்ரசத நாமாவளி (108 நாமங்களின் வரிசை) ஆகியவற்றை உச்சரித்து குருபகவானை வழிபடலாம்.

கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்று கவலைவேண்டாம், வீட்டிலிருந்தபடியே குருபகவானை நினைத்து வணங்கி, கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை  படைத்து வழிபட்ட பின்னர், அக்கபக்கத்தில் உள்ள நபர்களுக்கு தானம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

குருவிற்கு வியாழக்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் : 

வியாழக்கிழமை தோறும் சிவன்கோவிலிற்கு சென்று, அங்கு உள்ள ஸ்ரீதட்சணாமூர்த்தி சுவாமிக்கு அர்ச்சனை அல்லது கற்பூர ஆரத்தி செய்து வணங்கி வருவது நல்லது. 

ஆலயங்களில் நவகிரக மூர்த்திகளிடையே உள்ள குருவுக்கு வியாழக்கிழமையன்று கொண்டைக்கடலையை வைத்து படைத்து, முல்லைப்பூ, சாமந்திப்பூ மற்றும் மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து வழிபடுவது நன்மை உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

guru peyarchi is gurupagavan arul


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->