திமுகவின் அதிரடி பிரச்சாரத்தால் உற்சாகமான மக்கள்! விழிபிதுங்கி நிற்கும்...!  - Seithipunal
Seithipunal


திமுகவிற்கு மக்கள் வாக்களிப்பார்களா? 2006 2011 ஆட்சிக்காலத்தில் அவர்கள் மீது உண்டான அதிருப்திகள் மறை(ற)ந்திருக்குமா? என்றால் பதில் தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் தான் சொல்ல வேண்டும். ஆனாலும் 10 வருடங்கள் ஆட்சியில் இல்லை, ருசி கண்ட பூனை சும்மா இருக்காது என்பது போல அதிகார பசியில் இருக்கிறார்கள் திமுகவினர். 

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டது. அதுவும் பிஹாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, வாடகை மூளை காட்டும் வழியிலான, ஹைடெக் பிரச்சாரங்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் கோடிக்கணக்கில் கொட்டி செலவழிக்கிறார்கள். திருமண மண்டபங்கள், வாடகை பாத்திர நிலையங்கள், ஒலி ஓளி அமைப்பாளர்கள், அலங்கார வேலை செய்பவர்கள், வாடகைக்கு வண்டி வைத்திருப்பவர்கள் என அனைவரும் குதூகலமாக இருக்கிறார்கள். உணவகங்கள், குடிநீர் விற்பனையாளர்கள், அரசு டாஸ்மாக் என அமோகமாக விற்பனை களைகட்டுகிறது. ஆனால் நிர்வாகிகளோ செலவிற்கு விழி பிதுங்கி கொண்டிருக்கிறார்கள். தென்னந்தோப்பாக இருந்தாலும் சிவப்பு கம்பளம் இல்லாத கூட்டமே இல்லை. பசையுள்ள நிர்வாகிகளுக்கு பெரிய சுமையாக தெரியவில்லை என்றாலும், அடுத்து உறுதியாக வந்துவிடுவோமா என்ற உறுதி இல்லாமையால், கொஞ்சம் நடுக்கத்துடன் தான் இருக்கிறார்கள். 

களநிலவரம் இப்படி என்றால்,  இணைய பக்கம் பார்த்தால் டுவிட்டர், முகநூலில் பணத்தை கொட்டி இறைத்துள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி, மாவட்ட நிர்வாகிகளுக்கும் தனி, எம்பி எம்எல்ஏக்களுக்கு தனி என எல்லோருக்கும் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கம் உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் இதன்மூலம் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பணியாளர் என பல பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இணையத்தளங்களை திறந்தாலே திமுக விளம்பரங்களே வரிசை கட்டி நிற்கின்றன. 

அதேபோல சமூக ஊடகங்களில் அப்டேட்கள் தெறிக்கிறது. பேச்சை உடனுக்குடன் எழுத்தாக மாற்ற ஒரு பெரிய அணி செயல்படுகிறது. அதேபோல மிகை செலவிலான கேமிராக்கள் உடன் மிகச்சிறந்த புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள், வீடியோ எடிட்டர்கள் என இந்த துறையில் பலருக்கு பணி கிடைத்திருக்கிறது. அதன்பிறகு நான்காவது தூணுக்கும் அவரவர்களுக்கு ஏற்றவாறு கவனிக்கப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு அதனுள் இருப்பவர்களை தனியாக கவனிப்பது என அமர்க்களப்படுத்தி கொண்டிருக்கிறது திமுக. 

இவ்வளவு செலவு செய்து பிரச்சாரம் செய்யும் திமுகவை மக்கள் ஆதரிக்கிறார்களா? என்றால், பொதுக்கூட்டங்களுக்கு கூட்டங்கள் அலைமோதுகிறது. கொரோனாவில் வாடிக்கிடந்தவர்களுக்கு கொஞ்சம் பச்சை தெரிந்துள்ளது. ஒரு ரவுண்டு என்றால் பரவாயில்லை, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என பல ரவுண்டுகள் பிரச்சாரங்கள் நடப்பதால், மக்கள் உற்சாகமாகவே இருக்கிறார்கள். ஆனால் திமுக ஆட்சியில் இருந்த பிரச்சனைகளான மின்வெட்டு, கட்டப் பஞ்சாயத்து புகார், நில அபகரிப்பு புகார், அடாவடி, மிரட்டல்,உருட்டல் புகார்கள் எல்லாம் மக்கள் மனதில் இருந்து மறைந்திருக்குமா என்பது தான் தெரியவில்லை. 

மேலும் கூட்டத்திற்கு வந்த மக்களே, 200 ரூபாய்க்கும், பிரியாணிக்கும் தான் வந்தோம் என வெளிப்படையாக சொல்லும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகாமல் இல்லை. அதேபோல மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் டாஸ்மாக்கை மூட தொடர்ந்து குரல் கொடுக்கவில்லை,  திமுகவினரின் உறவினர்கள் வைத்திருக்கும் மது உற்பத்தி தொழிற்சாலைகளை கூட ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மூடுவோம் இல்லை என்றால் தொடர்ந்து உற்பத்தி செய்வோம் என கொள்கை உடைய கட்சியாக திமுக இருக்கிறது என அதிருப்தி குரல்களும் வெளிப்படாமல் இல்லை. கடந்த 2016 இல் தேர்தலுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்தவுடன் திமுகவினர் நடத்தும் மது தயாரிப்பு ஆலைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவராக இருந்த கருணாநிதியே தெரிவித்ததாக, அவருடைய மகளும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அம்பானி, அதானி என்ற கார்ப்ரேட்கள் நாட்டிற்கு ஆபத்து என திமுக எப்படி பிரச்சாரம் செய்து வருகிறதோ அதே கார்ப்ரேட் அளவிலான பிரச்சாரத்தையே திமுக செய்துவருவது குறிப்பிடத்தக்கது. இது மக்கள் மனதில் எடுபடுமா? தேர்தலில் வெற்றி பெறுமா என்பதனை தேர்தல் முடிவுக்கு பிறகு தான் தெரிய வரும். 

ஆனால் மக்கள் ஒரு விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தேர்தல் வருவதை ஒட்டி ஆளுங்கட்சி கடன் தள்ளுபடி, வழக்குகள் தள்ளுபடி என மிரட்டலான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. திமுகவும் தன் பங்குக்கு ஹைடெக் பிரச்சாரங்கள் மூலம் பலருக்கு வேலை கொடுத்துள்ளது. ஆக இரண்டு பக்கத்தின் செயல்பாடுகளினாலும் மக்கள் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே 3 ரவுண்டு பிரச்சாரம் என்றால், தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் எத்தனையோ என திமுக நிர்வாகிகள் தான் விழி பிதுங்குவதை மறைத்து நின்று கொண்டிருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Hi tech Campaign for 2021 assembly elections


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->