அதிமுகவை உடைக்க திமுக சதி? புகழேந்தி நீக்கத்தின் பகீர் பின்னணி! உஷாரான ஓபிஎஸ், இபிஎஸ்! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தியை கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். 

அவரின் நீக்கத்திற்கு காரணம் பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணியை நேரடியாக வெளிப்படையாக விமர்சித்தது தான், அதற்காகவே அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என பரவலாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அவர் திமுகவுடன் ரகசிய உறவில் இருந்தது தற்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேலும் அதை மறைக்கவே பாமகவின் அன்புமணியை பற்றி அவர் பேசி இருக்கிறார் என்பதும் தற்போது தெரியவந்திருக்கிறது. 

சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்த புகழேந்தி,  அவர் சிறையில் இருக்கும் போது அவருக்கான உதவிகளை செய்து வந்தார். பின்னர் தினகரனுடன் நெருக்கம் காட்ட, புகழேந்தியை பல்ஸ் பார்த்த தினகரன் புறக்கணிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு அதிமுகவில் இணைய முடிவெடுத்த அவர் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதிமுகவில் இணைக்கப்பட்டார். அதிமுக செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் ஓபிஎஸ் எதிர்கட்சி தலைவராக வேண்டும் என வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதன்மூலம் அவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என காட்டிக்கொண்டார். ஆனால் அந்த வீடியோக்கு பின்னால் திமுகவின் சதித்திட்டம் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும், ஓபிஎஸ் இபிஎஸ் இடையிலான கருத்து வேறுபாட்டினை அதிகப்படுத்தி கட்சியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன், திமுக புகழேந்தி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 

அதன்படியே அவர் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர் போல் காட்டிக்கொண்டு, ஓபிஎஸ் மீது குற்றம்சாட்டிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை விமர்சிப்பது போல பேட்டி அளித்ததும் திமுகவின் திட்டமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதனை உன்னிப்பாக கவனித்த எடப்பாடி தரப்பு ஓபிஎஸ் தரப்பிடம், அவர் உங்கள் ஆதரவாளர் இல்லை, நமது கட்சியில் இருக்கும் திமுகவின் ஸ்லீப்பர் செல் என போட்டு கொடுக்க, ஓபிஎஸ் கையெழுத்து போட்டு அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பை வெளியிட்டு, வீட்டுக்கு அனுப்பி உள்ளார். 

புகழேந்தி திமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. மேலும் விவாதங்களில் அதிமுக தரப்பில் யார் கலந்து கொள்ள வேண்டும், என்ன பேசவேண்டும் உட்பட சில விஷயங்களும் திமுக தரப்பில் இருந்து அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதன்படி செயல்பட்ட அவரை எடப்பாடி பழனிசாமி தரப்பு சரியாக கணித்து தற்போது அவரை வெளியேற்றி  இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில்தான் புகழேந்தியின் திட்டமானது வெட்டவெளிச்சமாக, கட்சியை விட்டு நீக்கப்படுவோம் என்பதை அறிந்த அவர், இறுதி நேரத்தில் அன்புமணியை விமர்சித்ததால் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சியில் இருக்க எப்படி தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்க, இறுதி நேரத்தில் வெளியான பேட்டிக்கு பின்னணி என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Pugalenthi Dismiss Issue


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal