1,76,000 கோடி ரூபாய்... 2 ஜி ஊழலில் ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு? ஆ ராசாவின் வைரல் ஆடியோ... அதிமுக கடும் விமர்சனம்!
DMK A Rasa viral audio DMk MK Stalin 2G case ADMk
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆ ராசா பேசிய ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ஸ்டாலின் எப்படிபட்ட தலைவர் என்பதை ஆ ராசாவே போட்டு உடைந்துவிட்டார்.
போலி விளம்பரங்களை விலக்கி பார்த்தால் ஸ்டாலின் வெறும் மண்குதிரை தான் என்று நாங்கள் சொன்ன கூற்றை இப்போது திமுக துணைப் பொதுச்செயலாளரே வழிமொழிந்து விட்டார்.
2 ஜி கருணாநிதியிடம் இருந்து என்ன பணம் சென்றது? அழகிரி சிறைக்கு வந்து, ஸ்டாலின் பெயரைக் கூறி அப்ரூவர் ஆகச் சொன்னார் என்றால், 1,76,000 கோடி ரூபாய் ஊழலில் ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு?
நாங்கள் ஏற்கனவே சந்தேகித்தது போல், இந்த சிதம்பர ரகசியங்களை கூறி தான் காங்கிரஸ் திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டதா?
ஆ ராசாவின் பேச்சு பற்றி ஸ்டாலின் வாய் திறப்பாரா?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
(பி.கு. : நாங்களாவது பொம்மை முதல்வர் என்று Decent ஆக தான் சொன்னோம். உங்க கட்சி துணைப் பொதுச்செயலாளர் உங்களுக்கு Brain இருக்கா? என்று கேட்டிருக்கிறார். அந்தோ பரிதாபம் முக ஸ்டாலின் அவர்களே!)
English Summary
DMK A Rasa viral audio DMk MK Stalin 2G case ADMk