இந்தியர்களுக்கு வேலை கொடுக்காதீங்க! கூகுள் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு டிரம்ப் கோரிக்கை!
USA Google Microsoft Indians job Donald Trump
அமெரிக்க தொழில்நுட்ப துறையில் உள்ள வேலைகள், அந்நாட்டு குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் பேசிய அவர், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களை நோக்கி எச்சரிக்கையாக இதனை தெரிவித்துள்ளார்.
அதில், "வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் பணியை நாம் நிறுத்தவேண்டும். அமெரிக்கர்களே முதன்மையாக இருக்க வேண்டும். நம் மக்கள் தங்களை புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள்.
பல நிறுவனங்கள் நாட்டில் கிடைக்கும் சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டு, மாறாக வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றன. இது எனது நிர்வாகத்தின் கீழ் இனி நிலவாது," என தெரிவித்தார்.
அத்துடன், இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்க நிறுவனங்கள் அதிக அளவில் வேலைக்கு அமர்த்துவதை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "அமெரிக்கர்களின் வாய்ப்புகளை நீங்கள் கவனிக்கவில்லை. நீங்கள் அவர்களை புறக்கணிக்கிறீர்கள். செயற்கை நுண்ணறிவில் வெற்றியடைய, சிலிக்கான் பள்ளத்தாக்கில் புதிய தேசபக்தி எழ வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டை முதன்மைப்படுத்த வேண்டும்," என வலியுறுத்தி உள்ளார்.
English Summary
USA Google Microsoft Indians job Donald Trump