யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - அதிரடி அறிவிப்பு!
UPSC Exam govt offer 1 laks
சத்தீஸ்கர் மாநில அரசு, யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு ஊக்கமாக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
மாநிலத்தின் அனைத்து நகராட்சி ஆணையர்களுக்கும் முதல்வர் விஷ்ணு தியோ சாய்யின் உத்தரவின்படி, மேயர் நிதியில் இருந்து இந்த தொகை வழங்க அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர். ராய்ப்பூரைச் சேர்ந்த பூர்வா அகர்வால் (65-வது இடம்), முங்கேலியின் அர்பன் சோப்ரா (313), ஜக்தால்பூரின் மான்சி ஜெயின் (444), அம்பிகாபூரின் கேஷவ் கார்க் (496) மற்றும் சாச்சி ஜெய்ஸ்வால் (654) ஆகியோர் இந்த சாதனையைப் பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை, மாநில இளைய தலைமுறைக்கு புதிய ஊக்கமாக அமையும் எனவும், அரசு இதை தொடர்ந்து ஆண்டுதோறும் மேற்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், அரசு நுண்ணறிவுப் பணியக தேர்வுகளுக்கான மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
English Summary
UPSC Exam govt offer 1 laks