பெரியார் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி படிப்பு, ஆன்லைன் படிப்புகள் செல்லாது - யுஜிசி அறிவிப்பு.!
UGC Say About Periyar University Distance Education
முன்னனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி ஆன்லைன் படிப்புகளை நடத்தி வருகிறது என்றும், இதுகுறித்து விசாரிக்குமாறு தமிழக ஆளுநருக்கும் உயர்கல்வித்துறை செயலாளருக்கும் யு ஜி சி கடிதம் எழுதி உள்ளது.
பெரியார் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய தொலைதூர படிப்புகள் செல்லாது என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் படிப்புகள் மற்றும் ஆன்லைன் படிப்புகளை நடத்தி வருகிறது. எனவே, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று, தமிழக ஆளுநருக்கும், உயர்கல்வித் துறை செயலாளருக்கும் கடிதம் ஒன்றை யுஜிசி எழுதி உள்ளது.
அந்த கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய தொலைதூரக்கல்வி படிப்புகளிலும் அல்லது ஆன்லைன் வகுப்புகளில் சேர வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி படிப்புகள் செல்லாது என்று யுஜிசி அறிவித்திருந்த நிலையில், தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்திய தொலைதூரக் படிப்புகளும் செல்லாது என்று யுஜிசி அறிவித்துள்ளது.
English Summary
UGC Say About Periyar University Distance Education