இன்று குரூப் 4 தேர்வுகள் : தேர்வு எழுதுபவர்கள் கவனிக்க வேண்டியவை என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இந்த தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

இந்த ஆண்டு மொத்தம் 6244 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஜனவரி 30ல் வெளியாகி பிப்ரவரி 28 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மூன்றாம் பாலினத்தவர் உட்பட சுமார் 20.36 லட்சம் பேர் இன்று தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு சில நடைமுறைகள்:

தேர்வு மையத்திற்கு காலை 7 மணியில் இருந்து 8 மணிக்குள் செல்ல வேண்டும். OMR விடைத்தாள் காலை 9 மணிக்கு வழங்கப்படும். தொடர்ந்து வினாத்தாள் 9.15க்கு வழங்கப்படும். இதையடுத்து தேர்வுகள் 9.30க்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு மையத்திற்கு நுழைவுச் சீட்டு, 4 கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா, ஆதார் போன்ற புகைப்பட அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். நுழைவுச் சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று, தேர்வு முடிந்த பிறகும் நுழைவுச் சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

நேர மேலாண்மையை பின்பற்ற வேண்டும். பதட்டமில்லாமல் தேர்வெழுத வேண்டும். OMR விடைத்தாளில் தேர்வு எழுதுபவரின் கையொப்பம், அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today TNPSC Group 4 Exmas


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->