தமிழகத்தில் இன்று முதல் ஆன்லைன் தேர்வுகள் தொடக்கம்.. உற்சாகத்தில் மாணவர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் ஊடங்கை அறிவித்து.

தற்போது, கொரோனா பரவல் அதிகளவில் இருப்பினும், அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த 27 ஆம் தேதி தமிழக அரசு விலக்கிக் கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்தது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று முதல் செயல்பட உள்ளது. 

இதனிடையே, இன்று முதல் வரும் 20 வரை ஆன்லைன் மூலமாக அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும் இறுதி செமஸ்டர் தேர்வை தவிர்த்து மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு மட்டும் நேரடி முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அப்போது தமிழக அரசு சார்பில் நேரடி தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்து, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையின் மூலம் கலைத்தனர். ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தேர்வுகள் தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today start online exam


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->