மறந்துடாதீங்க! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
TNPSC Group 4 date
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 3,935 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வில் எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் [www.tnpsc.gov.in](http://www.tnpsc.gov.in) என்ற இணையதளம் மூலம் மே 24 நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
கடைசி நேரத்தில் இணையப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால், முன்னதாகவே விண்ணப்பிக்குமாறு டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.
விண்ணப்பித்த பிறகு, தவறுகள் இருந்தால் மே 29 முதல் 31 வரை திருத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.