டிஎன்பிஎஸ்சி அதிரடி அப்டேட்...! குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு...! - மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதி வெளியீடு
TNPSC Action Update Important Announcement Group 4 Candidates Third Phase Counseling Date Released
தமிழக அரசு துறைகளில் நீண்டநாளாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆண்டுதோறும் திட்டமிட்ட கால அட்டவணையை வெளியிட்டு, அதற்கேற்றவாறு தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில், கடந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏற்கனவே கலந்தாய்வு நடத்தி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு தற்போது முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான மீதமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கில், மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அடுத்த மாதம் (மே) 8ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறினால், அவர்களுக்கு எந்தவித மறுவாய்ப்பும் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களுக்கான அழைப்பாணையை, அதில் குறிப்பிடப்பட்ட நாள், நேரம் மற்றும் பிற முக்கிய விவரங்களுடன் இணையதளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து, குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
TNPSC Action Update Important Announcement Group 4 Candidates Third Phase Counseling Date Released