பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவ இருக்கைகள் ரத்தா? உண்மை என்ன? பரபரப்பு தகவல்!
TN Govt School U Shape class
கேரளத்தில் ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியைத் தொடர்ந்து, சில பள்ளிகளில் 'ப' வடிவத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டது. இதைப் பின்பற்றி, தமிழ்நாட்டிலும் வகுப்பறைகளில் இதே மாதிரியான அமைப்பை உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு, சில அரசியல் கட்சிகளும் கல்வியாளர்களும் அதற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். "'ப' வடிவ இருக்கை மாணவ, மாணவிகளுக்கு உடல் வலிகளை ஏற்படுத்தும்; திரைப்பட சோதனைக்காக மாணவர்களின் நலனை பாதிக்கக் கூடாது" என்றும், இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, 'ப' வடிவ இருக்கை திட்டம் நிறுத்தப்பட்டதாக சில சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
ஆனால், இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை வட்டாரம், "'ப' வடிவ இருக்கை திட்டம் திரும்பப் பெறப்படவில்லை. அதை நிறுத்தியதாக வெளியாகும் செய்தி தவறானது. திட்டம் வழக்கமாக நடைமுறையில் இருக்கும்" என்றனர்.
English Summary
TN Govt School U Shape class