திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. பொதுத் தேர்வு அடிப்படையில் இந்த தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் தேர்வு பெறுவதற்கு முன் கூட்டியே வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியயது. 

இந்த விவகாரம் குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குனர் பொன்குமார் திருவண்ணாமலை நேரடியாக விசாரணை மேற்கொண்டதில். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் போளூரைச் சேர்ந்த ஆக்சில்லம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹாசின்  மெட்ரிக் பள்ளி இரண்டு பள்ளிகளில் விதிமுறைகளை மீறி விடைத்தாள்கள் கசிந்தது தெரிந்தது. 

இது தொடர்பாக குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்க திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரண்டும் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மாவட்ட கல்வி அலுவலர் அளித்த புகாரின் பேரில் போளூர் அக்ஸிலியம் மெட்ரிக் பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர்,கணித ஆசிரியர், அலுவலக பணியாளர் ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

question paper leak case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->