இளைஞர்களே ரெடியா... தர்மபுரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இதில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். 

மேலும் அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார்துறையில் வேலைக்கு சென்றால் அவர்களது பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனை யாளர், மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக், போன்ற பணி களுக்கு தேர்வு செய்ய உள்ளனர். 

இந்த முகாமில் டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துவித கல்வித் தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

எனவே தகுதியும், விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் நாளை நடைபெறவுள்ள தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக் கொண்டு பயன் பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Private sector employment camp tomorrow at dharmapuri


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->