தூத்துக்குடி இளைஞர்களே ரெடியா.! (10.02.2023)நாளை மறுநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)காலை 10 மணியளவில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

நடைபெறும் இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

கல்வி தகுதி:

• 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம்.

• முகாமில் கலந்து கொள்பவர்கள், தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

• மேலும் தனியார் நிறுவனத்தினரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம்.

• தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்தாகாது. 

மேலும் விவரங்களுக்கு... 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private job placement camp the day after tomorrow in Thoothukudi


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?
Seithipunal
--> -->