தமிழக காவல் துறையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு.. 10,906 காலி பணியிடங்கள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என  தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், http://tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்.26 முதல் அக்.26 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.10,096 பணியிடங்களுக்கு டிசம்பர் 13-ல் எழுத்துத்தேர்வு நடைபெறும். 

37 மாவட்டங்களில் இந்த தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படும். இந்த எழுத்து தேர்வு 1 மணி 20 நிமிடங்கள் நடைபெறும். ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 3 ஆயிரத்து 99 பெண்கள், திருநங்கைகள் உட்பட 3 ஆயிரத்து 784 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 6 ஆயிரத்து 545 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 119 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 458 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police job in tamilnadu


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal