சைபர் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு காவல்துறையில் புதிய நிபுணர் ஆட்சேர்ப்பு: - விண்ணப்பிப்பது எப்படி?
New expert recruitment in Tamil Nadu Police to prevent cyber crimes How to apply
தமிழ்நாட்டில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வங்கிக் கணக்குத் துரம்புகள், கிரிப்டோ மோசடிகள், டார்க் வெப்பில் செயல்படும் குற்றவாளிகள் என பல்வேறு ரீதிகளில் இளம் வயதினரும், பொது மக்களும் சிக்கி வருகின்றனர். இந்த சூழலில், இந்த சிக்கலான சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு ஒரு முக்கியமான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்திற்குத் தலைமையிடமாக சென்னை அசோக் நகரில் உள்ள பிடிசி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில், தொழில்நுட்ப திறமைகளை கொண்ட நிபுணர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
சைபர் நிபுணர்களுக்கு புதிய வாய்ப்பு
இவ்வாய்ப்பு, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் பாரன்சிக்ஸ், நெட்வொர்க் பாரன்சிக்ஸ், டார்க் வெப் பாரன்சிக்ஸ், கிரிப்டோ பாரன்சிக்ஸ், சைபர் சட்டம் போன்ற துறைகளில் அனுபவமும், நிபுணத்துவமும் கொண்ட நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவோர் சைபர் குற்ற வழக்குகளை விசாரிப்பதில் நேரடியாக காவல் துறைக்கு உதவ உள்ளனர்.
விசாரணை பணிகளில் பங்கு
இந்த நிபுணர்கள், நிதி மோசடி, ஹேக்கிங், ரான்சம்வேர் தாக்குதல், அடையாள திருட்டு, கிரிப்டோகரன்சி மோசடி, டார்க் வெப் குற்றங்கள் போன்ற சம்பவங்களில் முக்கிய பங்காற்ற உள்ளனர். சான்றுகள் சேகரிப்பு, பாரன்சிக்ஸ் பகுப்பாய்வு, சைபர் நுண்ணறிவு மற்றும் காவல் குழுக்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பல முக்கிய பணிகளும் இவர்களுக்குச் சேரும்.
விண்ணப்பம் எளிதானது
விண்ணப்பிக்க விரும்புவோர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் விண்ணப்பதாரர் பதிவு போர்ட்டலுக்குச் செல்லலாம். அங்கு தங்களுடைய கல்வி தகுதி, தொழில்முறை அனுபவம் மற்றும் சான்றுகளைப் பதிவேற்ற முடியும்.
ஒரு சமூகப் பொறுப்பு
சைபர் குற்றங்களை தடுப்பது அரசின் மட்டுமல்ல, சமூகத்தின் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். தொழில்நுட்ப நிபுணர்களுக்கு தற்போது காவல்துறையுடன் நேரடியாக இணைந்து பணியாற்ற ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இவை போன்ற வாய்ப்புகள் நம்மை ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் சமூகத்துக்குத் தூண்டுகிறது.
English Summary
New expert recruitment in Tamil Nadu Police to prevent cyber crimes How to apply