தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதியானது.!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு கடந்த 1ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பை அடுத்து மாணவர்கள் கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டுமென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 1ஆம் தேதி இந்த பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 250 மாணவ மாணவியர்கள் பயின்று வந்துள்ளனர். பத்தாம் வகுப்பில் 44 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு வந்த முதல் நாளே ஒரு மாணவிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முதல் நாளே அந்த பள்ளியில் உள்ள 55 மாணவ மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் இந்த ஒரு மாணவிக்கு மட்டும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த மாணவி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அந்த வகுப்பில் படித்த 44 மாணவ மாணவிகளுக்கும் நேற்று மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அந்த மாணவியின் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கும் நோய் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதேசமயத்தில் இன்று பள்ளியில் உள்ள மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

namakkal 10th sudent affected corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->