சட்டபடிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


நடப்புக் கல்வியாண்டுக்கான (2025-2026) மூன்று ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 12.05.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் சட்டப் படிப்புகளில் சேர்வதற்காக “School of Excellence in Law”, சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், சட்ட படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வித்தகுதி, நுழைவுத் தேர்வு விவரங்கள், கட்டண கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து, சரியான தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும், மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தனி அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் சந்தேகங்களுக்கு 044-24641919 / 24957414 என்ற தொலைபேசி எண்களில் அல்லது thechairmanlawadmissions@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

law courses apply date extend


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->