இளைஞர்களுக்கு குட் நியூஸ்.!! 3 மாதத்தில் 2 லட்சம் பேருக்கு வேலை.! - Seithipunal
Seithipunal


இளைஞர்களுக்கு குட் நியூஸ்.!! 3 மாதத்தில் 2 லட்சம் பேருக்கு வேலை.!

நேற்று, அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், "வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலைவாய்ப்பு துறையால் தமிழகமெங்கும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இந்த ஆண்டின் இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கல்வி தொலைக்காட்சி மூலமாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில், பயிற்சிக் காணொலிகள் ஒளிபரப்பும் திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து போட்டித் தேர்வு ஆர்வலர்களும் பயன்படுத்தி அரசு பணி பெற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் 100 சதவீதத்தை எட்ட வேண்டும். தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குவதுடன், கிராமப்புற மாணவர்கள் தங்களது நிலையை உயர்த்திக் கொள்ளும் வகையிலான திறன் பயிற்சி அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job to 2 lakhs peoples minister cv sanmugan info


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->