"தபால் துறையில் 25,000+ காலிப்பணியிடங்கள்!": 10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
India Post Recruitment 2026 Over 25000 Vacancies Announced Check Eligibility Salary and How to Apply
பணியிட விபரங்கள் மற்றும் ஊதியம்
இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் பணியாளர்கள் (GDS), கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு மட்டும் 2,095 இடங்கள் ஒதுக்கப்பட்டிள்ளன.
ஊதிய விவரம்: கிராம அஞ்சல் பணியாளர்களுக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரையிலும், கிளை மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரையிலும் சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு (10th Standard) தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்கள் தமிழை ஒரு பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அடிப்படை கணினி அறிவும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியமாகும்.
வயது வரம்பு: 21.09.2026 தேதியின்படி 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அரசின் விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்
தேர்வு முறை: இப் பணியிடங்களுக்கு எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி, பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.
முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் indiapost.gov.in அல்லது indiapost.gov.in/gdsonlineengagement என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஒருமுறை பதிவு (Registration): 31.08.2026 முதல் 19.09.2026 வரை
விண்ணப்பப் பதிவு (Application Submission): 02.09.2026 முதல் 21.09.2026 வரை
விண்ணப்பத் திருத்தங்கள் (Correction Window): 23.09.2026 முதல் 24.09.2026 வரை மேற்கொள்ளலாம்.
English Summary
India Post Recruitment 2026 Over 25000 Vacancies Announced Check Eligibility Salary and How to Apply