உயர்நிலை பள்ளிகளில் 'மகிழ்ச்சி' பாடம் நடத்த மத்திய பிரதேச அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


அடுத்த கல்வியாண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளில் மகிழ்ச்சி என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் மகிழ்ச்சி என்ற புதிய பாடத் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் நாட்டிலேயே முதன் முதலாக மத்திய பிரதேச மாநிலம் தான் கல்வித்துறையில் மகிழ்ச்சி என்ற புதிய பாடத்திட்டத்தை சேர்க்க உள்ளது என்றும் இப்பாடத்திட்டம் குறித்து கடந்த நவம்பர் மாதம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பாடத்திட்டத்தை தயாரிக்கும் இறுதிகட்ட பணிகள் முடிந்தபின் மாநில கல்வி ஆராய்ச்சி கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஒப்புதல் கிடைத்தவுடன் பள்ளிகளில் பாடம் துவங்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Happiness subject for High School students


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->