மோசடியா...? போலி கணக்குகளை நம்ப வேண்டாம்...! - அதிரடியாக விளக்கம் கொடுத்த அகரம் பவுண்டேஷன்...!
Fraud Dont trust fake accounts Agaram Foundation gives dramatic explanation
‘அகரம் பவுண்டேஷன்’ அமைப்பு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அகரம் பவுண்டேஷன் தனது சேவைகளை சென்னையின் தியாகராய நகரில் அமைந்துள்ள ஒரே அலுவலகம் மூலம் மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் எவ்வித கிளை அலுவலகங்களும் செயல்படவில்லை என்பதும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘அகரம் விதை திட்டம்’ மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படும் செயல்முறை முழுமையாக சமூக மற்றும் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. இந்த திட்டத்தின் பெயரில் மாணவர்களிடமோ, பெற்றோர்களிடமோ எந்தவித கட்டணமும், பணமோ அல்லது பொருள்களோ பெறப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீப காலமாக சில நபர்கள் மற்றும் அமைப்புகள் “அகரம்” என்ற பெயரை தவறாக பயன்படுத்தி, போலியான தகவல்களை பரப்பி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏமாற்ற முயற்சித்து வருவது அமைப்பின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, “அகரம்” சார்பில் அணுகுவதாக கூறும் யாரிடமும், அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாமல் எந்தவிதமான தகவல்களையும் அல்லது பொருட்களையும் வழங்க வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கீழ்க்காணும் விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது:
மூல கல்விச் சான்றிதழ்கள்,
பணம்,
தனிப்பட்ட தகவல்கள்.
மேலும் தொடர்புகளுக்காக, அகரம் பவுண்டேஷன் அலுவலகம் – எண் 15, அருளாம்பாள் தெரு, தியாகராய நகர், சென்னை – 600017 என்ற முகவரியை அணுகலாம்.
தொலைபேசி எண்கள்: 044 43506361 / 98418 91000
மின்னஞ்சல்: info@agaram.in
இணையதளம்: agaram.in
இந்த தகவல்கள் அனைத்தும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Fraud Dont trust fake accounts Agaram Foundation gives dramatic explanation