தனித்தேர்வர்கள் 11-ஆம் வகுப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களின் பதினொன்றாம் வகுப்பு மதிப்பென் சான்றிதழை வரும் 14-ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு துணை தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இரு வகுப்புகளுக்கும் தனித்தனியே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். இரண்டு வகுப்புகளிலும் சேர்த்து ஏதாவது ஒரு பாடத்திலோ அல்லது அதற்கும் அதிகமான பாடங்களிலோ தேர்ச்சி அடையாமல் இருந்தால் அவர்களுக்கு இரு வகுப்புகளுக்கும் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கும் அதிகமான பாடங்களிலோ தேர்ச்சி அடையாமல் இருப்பவர்கள், அவற்றில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கு 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், அவ்வாறு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய தனிதேர்வர்களில், 12- ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் மட்டும் தங்களது 11-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வரும் 14-ஆம் தேதி முதல் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eleventh private exam certificate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->