நிவர் புயல்: இன்றும், நாளையும் நடைபெற இருந்த சி.ஏ தேர்வுகள் தள்ளிவைப்பு.! புதிய தேதி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றது. தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்க கடலில் உருவானது. மேலும், நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த புயல் சென்னைக்கு அருகில் 450 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் நாளை மலை தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

புயலின் தாக்கத்தை சந்திக்கவுள்ள புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவித்துள்ளனர். மேலும், விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கும் அரசு பேருந்துகளும் இயங்காது என அறிவித்துள்ளனர். மேலும், புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக வரும் 26ஆம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நிவர் புயல் எதிரொலியால் இன்றும், நாளையும் நடைபெற இருந்த சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற இருந்த சி.ஏ., தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CA exam post pone


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->