ரூ.86 ஆயிரம் சம்பளம்... பூடான் நாட்டில் பணி! தமிழக அரசு சொன்ன வேலைவாய்ப்பு செய்தி! - Seithipunal
Seithipunal


பூடான் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் வேலைவாய்ப்பு இருப்பதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது அதன் அறிவிப்பில், "பூடான் நாட்டின் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணியாற்ற செவிலியர்கள் தேவைப் படுகின்றனர். பிஎஸ்சி நர்சிங் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 23 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். 2 முதல் 5 ஆண்டு அனுபவம் உள்ளோருக்கு ரூ.65 ஆயிரமும், 6 முதல் 10 ஆண்டு அனுபவம் உடையவர்களுக்கு ரூ.73 ஆயிரமும், 10 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் உள்ளோருக்கு ரூ.86 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

செவிலியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலை சுய விவரங்களுடன் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஏப்ரல் 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

படிப்பு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும், இந்தப் பணிக்கு தேர்ச்சி பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bhutan Govt Hospital job 2025


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->