வரும் 31 ஆம் தேதிக்குள்., அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த அதிரடி சுற்றிக்கை.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பாலியல் புகார் பேட்டி வைக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 37,391 அரசு பள்ளிகள் உள்ளது. இந்த அனைத்து பள்ளிகளிலும் வரும் 31-ந்தேதிக்குள், மாணவ-மாணவிகள் தங்களுக்கு நிகழும் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க புகார் பெட்டிகளை அமைக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், தமிழகத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் ஆரோக்கிய நலனுக்காக 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.7.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகள் வைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள தற்போது அனுமதி தரப்படுகிறது. 

மேலும் அதற்கான வழிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி 

மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். 

இந்த குழுவின் சார்பில் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். 

ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு பற்றிய பயிற்சி பின்னர் வழங்கப்படும்.

பள்ளிகளில் ‘மாணவர் மனசு’ என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். 

புகார் பெட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை திறந்து அதில் இருக்கும் புகார்களுக்கு உடனே தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

பள்ளி வளாகங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு பலகைகளும் வைக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்களுக்கு இதற்க்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ALL GOVT SCHOOL MUST COMPLAINT BOX


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal