12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் இன்று தொடக்கம்...மே 8ல் முடிவுகள்...! - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
12th standard answer sheet correction starts today Results May 8th Important announcement students
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 20ஆம் தேதி வரை தீவிரமாக திருத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் 2ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பொதுத்தேர்வில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 7,99,692 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இப்போது, அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய கட்டமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் வேகமெடுத்து தொடங்கியுள்ளது.
முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் இன்று முதல் விடைத்தாள்களை ஆய்வு செய்து, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கிய விடைக்குறிப்பில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை உதவி தேர்வாளர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்களை முறையாக திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த பணிகள் அனைத்தும் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் முகாம்களில் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
12th standard answer sheet correction starts today Results May 8th Important announcement students