27, 28, 29-ந்தேதிகளில் 10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு..! - Seithipunal
Seithipunal


10-ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு  குறித்து அரசுதேர்வுகள் இயக்கம் செய்திகுறிப்பை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாஅவது,

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வருகிற 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடக்க உள்ளது. 

இந்த பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி அத்தேர்வில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள், மேற்படி தேதிகளில் நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வு எழுத அறிவிக்கப்படுகிறார்கள்.

அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெற உள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளியில் இருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்க பெறாதவர்கள், இந்த அறிவிப்பை தெரிந்து கொண்டு, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளும் பொருட்டு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10th Practical Exam date


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->