மூதேவி என்று திட்டும் முன் யோசிங்க, யார் இந்த மூதேவி தெரியுமா..? தவறாக திரிக்கப்பட்ட உண்மை, புலவர்களால் போற்றப்பட்ட பெண்..
மூதேவி என்று நாம் ஒருவரை திட்டுகிறோம், செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்பதமாக திணிக்கப்பட்ட பெயர் இது
உண்மையில் மூதேவி யார் அவரின் சிறப்புக்கள் தமிழரை எங்கனம் பெருமை படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
அமங்கலமானவள், சோம்பேறி, எதற்கும் உதவாதவள் என்று மூதேவியின் பொருளாக நாம் எதையெதையோ கருதிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் என்ன..?
மூதேவி என்பவள்தான் நம் முன்னோர்கள் அனுதினமும் வழிபட்டு வந்த மிகவும் சக்தி வாய்ந்த குலதெய்வம் என்றால் நம்புவீர்களா? படித்தால் உங்களுக்கே உண்மை விளங்கும்

தவ்வை என்பவர் பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவரை மூதேவி, ஜோஷ்டா தேவி, மூத்தோள் என பல பெயர்களில் அழைக்கின்றனர். இவரைத்தான் துரதிஷ்டத்தின் கடவுள் என பின்னாளில் திரித்துவிட்டதாக நம்புகின்றனர் பலர்.
தவ்வை என்னும் மூதேவி சனீஸ்வரனின் மனைவியாகவும் போற்றப்படுகிறார். இவரை பல அரும்பெரும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. திருவள்ளுவரும், ஔவையும் இவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

நெல்லாக கருதப்படும் திருமகளுக்கு அக்காவாக மூதேவி உரமாக இருக்கிறார் என்கிறது ஆன்மீகம். ஆனால், தமிழரிஞர்களின் பார்வையில் மூத்ததேவி ஒரு காலத்தில் அவ்வையைப் போல பெரும்புலவராக இருந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
எப்படி எமனை எதிர்பதமான தெய்வமாக கட்டமைத்தார்களோ, அதன்படியே மூதேவியையும் எதிர்மறையாக சோம்பேறியாக ஆக்கிவிட்டனர்.. உண்மையில் மூதேவி என்பவர் கடவுள் அல்ல புலவர் என்பது இவர்களுடைய வாதம்.